தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-12-14 19:00 GMT

தெருநாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், காஜாமலை காளியம்மன் தெரு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் செல்பவர்களை கடிக்க வருவதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கடிக்க பாயும் தெருநாய்கள்

திருச்சி மாநகராட்சி 39 மற்றும் 43-வது வார்டு வடக்குக்காட்டூர், தெற்குக்காட்டூர் ஆகிய பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளையும் கடிக்க பாய்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

புதிய வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து சித்திரப்பட்டி, கொல்லப்பட்டி, சே.புதூர், சேனப்பநல்லூர், நாயக்கன்பட்டி, காவிரிப்பட்டி, தா.பேட்டை வழித்தடத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் போதுமான போக்குவரத்து வசதியின்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து துறையூரில் இருந்து மேற்கண்ட விழித்தடத்தில் பவித்திரம் அல்லது எருமைப்பட்டி வரை புதிய வழித்தடத்தில் நகர பஸ்கள் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், முத்தரசநல்லூர் கிராமம் முத்தமிழ் புற தெருவில் கடந்த 3 மாதமாக தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் சாலையில் நடமாட பெரிதும் அச்சப்படுகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எரியாத மின்விளக்குகளை சரிசெய்து எரியவைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

எரியாத தெருவிளக்குகள்

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள டாக்டர் கலைஞர் சாலையில் இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுவதினால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்