தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-17 18:45 GMT

நாய்கள் தொல்லை

பெரம்பலூர் புறநகர்பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவில் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. கூட்டமான ஒன்று சேர்ந்து சுற்றித்திரியும் நாய்கள் தெருவில் செல்வோர்களை தூரத்தி கடிக்க பாய்கிறது. மேலும் சிறுவர்கள் கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களை பிடுங்கி தின்று விடுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் பள்ளம்

பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் வேப்பந்தட்டை வேதநதி ஆற்றுப்பாலம் அருகே குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் இதே சாலையில் பருத்தி ஆராய்ச்சி நிலையம் எதிரில் சாலையின் குறுக்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தினால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து இந்த சாலையில் உள்ள பள்ளத்தை தார் ஊற்றி சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் கிடக்கும் மண்கள்

பெரம்பலூர்- அரியலூர் சாலையில் இருசக்கர வாகனங்கள் செல்லும் பகுதியில் இருக்கும் சிறிய கற்கள், கிரசர் பவுடர்கள், மண் உள்ளிட்டவை காற்றில் பறக்கும்போது இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி விரைந்து இதனை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாதுகாப்பற்ற நிலையில் பள்ளி மாணவிகள்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு வகுப்பு என கூறி மாலை 5:30 மணி அளவில் விடுவதால் மாணவிகள் பஸ் வசதி இல்லாத காரணத்தால் வீட்டிற்கு 7:30 மணி அளவில் வருகிறார்கள் என்று தொடர்ந்து புகார் அளித்து வருகிறார்கள் பெற்றோர்கள். ஆனால் பள்ளி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பெற்றோர்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் காலையில் எவ்வளவு நேரம் ஆனாலும் வகுப்புக்கு அனுப்புகிறோம். ஆனால் மாலையில் விடுவதால் மாணவிகளுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மதுப்பிரியர்கள் அட்டகாசம்

பெரம்பலூர் உழவர் சந்தை அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இரவு நேரங்களில் சிலர் கூட்டமாக அமர்ந்து மது அருந்துகின்றனர். மேலும் அவர்கள் காலிபாட்டில்களை அங்கேயே உடைத்து அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்