தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான தார்சாலை
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம் வன்னியம்பட்டி ஊராட்சி வடக்குப்பட்டி ஆர்ச் முதல் கூத்தம்பட்டி இணைப்பு சாலை வரை தார் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட தார் சாலை தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் பெரியவர்கள் நிலைத்தடுமாறி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
காடுபோல் காட்சி அளிக்கும் மாணவியர் விடுதி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் உள்ள மாணவியர் விடுதி முகப்பு மிகவும் காடு போல் காட்சி அளிக்கிறது. இதனால் இப்பகுதியில் பாம்பு, பூச்சுகள் அதிகம் வர அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாழடைந்த ரேஷன் கடை கட்டிடம்
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்தில் உள்ள செங்குளம் ரேசன் கடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பாழடைந்து காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி
புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் பகுதியில் ஏடி காலனி சாலையில் பள்ளம் உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் ஏற்பட்டு இருந்த பள்ளத்தை சரிசெய்தனர். இதற்கு இப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும் நன்றி தெரிவித்தனர்.
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இருந்து கந்தர்வகோட்டைக்கு 2 அரசு டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கபடுகின்றன. இந்த வழித்தடம் கிராம பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு சென்று வரும் மாணவ-மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் இந்த பஸ்களில் படிகட்டுகளில் தொங்கிய நிலையில் ஆபத்தான பயணம் செய்கின்றனர். போதிய பஸ் வசதி இல்லாததால் பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.