தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-26 18:20 GMT

எரியாத மின் விளக்குகள்

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெட்டவாய்த்தலை ஊராட்சிக்கு உட்பட்ட சேரன் நகர், பாரதிநகர், பரிசல்துறை ரோடு, கே.என்.சாலை, மாதாகோவில் தெரு, வைகோ நகர், பழங்காவேரி வடக்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின் விளக்குகள் எரிவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த மின்கம்பம்

திருச்சி மாவட்டம், காட்டூர் பகுதியில் உள்ள கோகுலநகர் 8-வது தெரு மேற்கு தெருவில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் சாலையோரம் மின் கம்பம் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெயர்ந்து விழும் மேற்கூரை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அக்ரகாரம் தெருவில் உள்ள நகராட்சி நாளங்காடியில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதால் மேற்கூரை சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள், வியாபாரிகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் குமுளூர் பஞ்சாயத்தை சேர்ந்த வைகை காலனி 3-வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்வது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைக்கும் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிடப்பில் போடப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளறை கிராமம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஆயிரகணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் தேவைக்காக இப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அரசு அனுமதி வழங்கியும், இதுநாள்வரை மாவட்ட மருத்துவத்துறை எவ்விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த வாய்க்கால் பாலம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம் ஊராட்சி, மாணிக்கபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் மக்கள் தெற்கு வாய்க்கால் கரையை கடந்து செல்வதற்காக வாய்க்காலில் சிறிய பாலம் அமக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த பாலம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த பாலம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்