தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-13 17:31 GMT

குறைந்த மின்னழுத்தம்

அரியலூர் மாவட்டம், அயன்ஆத்தூர் கிராமம் தெற்கு தெருவில் பல குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பல மாதங்களாக குறைந்த மின்னழுத்த மின்சாரமே வருகிறது. இதனால் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டி, மின் மோட்டார், மின் விசிறி போன்ற வீட்டு உபயோக பொருட்கள் சரியாக இயங்காமல் பழுதடைந்து வருகிறது. 4 மாதங்களுக்கு முன்பே எங்கள் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க உபகரணங்களை கொண்டு வந்து இறங்கி உள்ளனர். ஆனால் புதிய மின் கம்பங்கள் மட்டும் நட்டு உள்ளனர். மற்ற பணிகள் இன்னும் தொடங்கவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆக்கிரமிக்கப்படும் ஓடையால் விவசாயிகள் கவலை

அரியலூர் வட்டத்தில் நாகலூர் ஓடை அமைந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பல ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இந்த ஓடை வழியாக நிறைய ஏரிகள், குளங்கள் மற்றும் குட்டைகள் நிரம்பி விவசாய நிலங்களுக்கு பயனைந்து வருகின்றது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதுடன், செடி-கொடிகள் மற்றும் மரங்கள் அடர்ந்து நீர் முழுவதும் பாசனத்திற்கு வருவது இல்லை. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குறுகலான சாலை

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள ஸ்ரீ புரந்தான் கிராமத்தில் தா.பழூர் செல்லும் முக்கிய சாலை செக்கடி பஸ் நிறுத்தம் முதல் சிவன் கோவில் வரை இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் வாகனங்கள் ஒதுங்கி செல்ல முடியாமல் மிகவும் சிரமம் அடைகின்றன. எனவே ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை நெடுஞ்சாலைத்துறையில் சேர்க்கப்படாமல் கிராம சாலையாகவே உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார்சாலை

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் இருந்து குண்டவெளி வழியாக கல்லாத்தூர் செல்லும் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உடனடியாக இந்த கிராம ஊராட்சி சாலையை தரம் உயர்த்தி மாநில சாலையாக போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சீரமைக்கப்படாத பயணிகள் நிழற்குடை

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், இரும்புலிக்குறிச்சி மற்றும் சிறுகடம்பூர் கிராமங்களுக்கு இடைப்பட்ட ஆனந்தவாடி பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படாமல் சிதிலமைந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பயணிகள் நிழற்குடையை மறு சீரமைப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Tags:    

மேலும் செய்திகள்