தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-22 19:08 GMT

வேகத்தடை அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், குளித்தலை பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் வழியில் பஸ் நிலையம் அருகே வளைவான பகுதி உள்ளது. இச்சாலை வழியாக வேகமாக வாகனங்கள் இந்த வளைவு பகுதியில் வரும்போது விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே விபத்துகளை தடுக்கும் பொருட்டு இந்த வளைவு பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குளித்தலை.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

கரூர் மாவட்டம், பெரியவரப்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த தொட்டி தற்போது பயன்பாடு இன்றி உள்ளதால் இப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரியவரப்பாளையம்.

சாலையை சீரமைக்க வேண்டும்

கரூர் அண்ணாநகர் சாலையில் பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர் பள்ளத்தை தற்காலிகமாக மண்களை கொட்டி மூடி உள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அண்ணாநகர்.

நிழற்குடை இன்றி பயணிகள் அவதி

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பஸ் நிலையத்தில் திருச்சி மற்றும் கரூர் மார்க்க பஸ்கள் நிற்கும் இடங்களில் நிழற்குடை அமைக்கப்படாததால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் முதியவர்கள் உட்கார இடம் இன்றி வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுந்தர், குளித்தலை.

குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும்

கரூர் மாவட்டம், கடவூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்கு இப்பகுதியில் குப்பை தொட்டிகள் அமைக்கப்படவில்லை. மேலும் கழிவுநீர் செல்லும் வகையில் முறையாக கழிவுநீா் வாய்க்கால் வசதியும் இல்லை. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கடவூர். 

Tags:    

மேலும் செய்திகள்