தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-11 18:47 GMT

கொசுக்களால் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா குரூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கொசுக்களின் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதி மக்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குரூர்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், தெரணி கிராம மாணவர்கள் தினமும் காரை கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கு பயில்வதற்காக சென்று வருகின்றனர். மேலும் தெரணி கிராம பொதுமக்களும் தினமும் காரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவ தேவைக்காகவும், ஆலத்தூர் தாலுகா அலுவலகத்திற்கும் சென்று வருகின்றனர். அனைவரும் காலை 9 மணிக்கு வரும் அரசு பஸ்சை பயன்படுத்துகின்றனர். அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே அரசு பஸ்சை பயன்படுத்தி வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்சின் படியில் நின்று ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் உரிய நேரத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரி செல்ல முடியவில்லை. எனவே காலை மற்றும் மாலை வேளையில் கூடுதலாக அரசு பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தெரணி 

Tags:    

மேலும் செய்திகள்