தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-07 18:00 GMT

மேம்பாலத்தில் முளைக்கும் மரக்கன்றுகள்

புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி தேசிய நெடுஞ்சாலை களமாவூர் ரெயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் பாலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய மரக்கன்றுகள் வளர்ந்து உள்ளன. இதனால் சுவர் பாதிப்பு ஏற்பட்டு பாலத்தின் மேல் உள்ள சாலை சேதமடைய அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செய்யது இஸ்மாயீல் ,கீரனூர், புதுக்கோட்டை.

நடைபாதை ஏற்படுத்தப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் மூடப்படாமல் உள்ளது. இதனால் சாலையோரம் நடந்து செல்லும் பொதுமக்கள் சாலையில் 2 வாகனங்கள் செல்லும்போது ஒதுங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களின் மேல் பகுதியில் சிமெண்டு சிலாப்புகள் அமைத்து நடைபாதை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மணமேல்குடி, புதுக்கோட்டை. 

Tags:    

மேலும் செய்திகள்