தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்களால் தொல்லை
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் நகரம் இந்திர நகரில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை அந்த வழியாக செல்லும் சிறுவர், சிறுமிகளை கடித்து விடுகின்றன. மேலும் சாலையில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்துவதினால் அவர்கள் பயத்தில் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், ஜெயங்கொண்டம், அரியலூர்.