தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-02 18:10 GMT

குண்டும், குழியுமான சாலை

கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் உள்ள மலையம்பாளையம் தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் மோட்டார் சைக்கிளை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மலையம்பாளையம், கரூர்.

தெருநாய்களால் தொல்லை

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளிலும் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சில நாய்கள் வெறி பிடித்து இப்பகுதியில் உள்ள குழந்தைகளை கடித்து வருகிறது. மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை துரத்துகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தோகைமலை, கரூர். 

Tags:    

மேலும் செய்திகள்