தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தேங்கி நிற்கும் மழைநீர்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் லேசான மழை பெய்தால்கூட பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பயணிகள், பெரம்பலூர்.
சேதமடைந்த மூடி
பெரம்பலூர் நகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட சுந்தர் நகர் பகுதியில் சாலையின் நடுவே பாதாள சாக்கடை செல்கிறது. இதில் அடைப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வகையில், ஆங்காங்கே சாலையின் நடுவே மூடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு மூடி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது, அவை விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
மதுப்பிரியர்களால் அதிகரிக்கும் குப்பை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டப்பாடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் பாலையூரில் உள்ளது. இந்த அலுவலகத்தின் அருகே இரவு நேரத்தில் பலர் மது அருந்திவிட்டு அந்தப் பகுதியிலேயே பிளாஸ்டிக் கழிவுகளை போட்டுவிட்டு செல்கின்றனர். தற்போது குப்பைகள் அதிகரித்து அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் முகம் சுழித்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், தொண்டப்பாடி.