தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-09 18:05 GMT

சிதிலமடைந்த தொகுப்பு வீடுகள்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, தேண்கனியூர் ஊராட்சி வடக்கு மோத்தப்பட்டி காலனியில் சுமார் 30 ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பகுதி மக்கள் வீட்டில் வசிக்கும்போது, இந்த வீடுகள் இடிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடக்கு மோத்தப்பட்டி.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் ஆலையின் அருகில் சுமார் 50 சென்ட் பரப்பளவில் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் கொசு தொல்லை அதிகமாக காணப்படுகிறது. மேலும் இங்கு தேங்கி நிற்கும் கழிவுநீர் அருகில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் கலந்து விடுகிறது. இதனால் தண்ணீரில் மாசு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கல்லாலங்குடி.

மாணவர்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக கணிதம், இயற்பியல் உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே கறம்பக்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கறம்பக்குடி.

வடிகால் வசதி அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பேரூராட்சி பகுதியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது 15 வார்டுகளில் உள்ள தெருக்களில் தார் மற்றும் சிமெண்டு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த சாலைகளுக்கு வடிகால் வசதி ஏதுமில்லை. இதனால் மழை பெய்தால் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து செல்லும் நிலை உள்ளது. தொடர்ந்து சாலைகள் உயர்த்தப்பட்டு வருவதால் குடியிருப்பு பகுதிகள் பள்ளமாகி வருகின்றன. எனவே வடிகால் வசதியுடன் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கறம்பக்குடி.

Tags:    

மேலும் செய்திகள்