தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-07-05 18:21 GMT

புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி செல்லம்மாள் நகரில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

பொதுமக்கள், செல்லம்மாள் நகர்.

சாலையில் ஓடும் கழிவுநீர்

திருச்சி கே.கே.நகர் செல்லும் சாத்தனூர் சாலையில் ரங்க நகர் 3-வது தெருவின் அருகில் சாலையோரத்தில் முறையான கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் செல்கிறது. கடந்த 6 மாதங்களாக இதே நிலை நீடித்து வருவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்றுபரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கே.கே.நகர்.

எலும்புக்கூடான மின்கம்பம்

திருச்சி புத்தூர் சீனிவாச நகரில் உள்ள பாத்திமா காலனியில் சாலை ஓரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் கீழே விழுந்து எலும்பு கூடு போல் காட்சியளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருச்சி.

பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், சித்தானந்தம் ஊராட்சியில் உள்ள முருகன் கோவில் அருகில் ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்குழாய் கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதுகாரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கழற்றப்பட்டது. ஆனால் மீண்டும் பொருத்தப்படாமல் உள்ளது. இதனால் இந்த நீர்த்தேக்க தொட்டி பயன்பாடு இன்றி வீணாகி வருகிறது. மேலும் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், சித்தானந்தம்.

Tags:    

மேலும் செய்திகள்