பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா் பெட்டி
தினத்தந்தி புகாா் பெட்டி
சுகாதாரக்கேடு
கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கருக்கம்பாலி ரோடு வருகிறது. அந்த ரோட்டில் மயானம் அருகே சாலையோரம் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பையை அகற்றி அந்த பகுதியை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோபி.
ஆபத்தான மின் கம்பம்
சத்தியமங்கலம் அருகே இக்கரைநெகமம் புதூரில் சாலையோரத்தில் மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பம் பழுதடைந்து அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து எலும்புக்கூடு போன்று காட்சி அளிக்கிறது. எனவே ஆபத்தான நிலையில் காணப்படும் இந்த மின் கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், இக்கரைநெகமம் புதூர்.
தேங்கிநிற்கும் சாக்கடை கழிவுநீர்
பவானி அருகே உள்ள பெரியபுலியூர் எம்.ஜி.ஆர். நகரில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் முறையாக கட்டப்படவில்லை. இதனால் சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி பள்ளிக்கூடத்துக்கு செல்லும் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள் அந்த சாக்கடை நீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே சாக்கடை வடிகாலை சரிசெய்து கழிவுநீர் தங்கு தடையின்றி செல்ல சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், பெரியபுலியூர்.
வேகத்தடை அமைக்க வேண்டும்.
ஈரோடு வ.உ.சி. பூங்காவையொட்டி உள்ள பவானி ரோட்டில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே வேகத்தடை அமைத்து விபத்தை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவா, ஈரோடு.
பஸ்கள் நின்று செல்லுமா?
பவானி மெயின் ரோட்டில் உள்ள நாட்டராயன்கோவில் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்காமல் செல்கின்றன. இதனால் பொதுமக்கள், முதியவர்கள், பெண்கள் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையம் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். நாட்டராயன்கோவில் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், நாட்டராயன்கோவில்.
குப்பைதொட்டி வைக்கப்படுமா?
ஈரோடு அருகே 46 புதூரில் இருந்து மொடக்குறிச்சி செல்லும் வழியில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதில் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை கால்நடைகள் தின்று வருகின்றன. எனவே குப்பையை கீழே கொட்டுவதை தடுக்க அங்கு ஒரு குப்பை தொட்டி வைக்க வேண்டும். இதற்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.
பொதுமக்கள், 46 புதூர்.