திரவுபதையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

அதிராம்பட்டினம் திரவுபதையம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-04-10 18:45 GMT

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் திரவுபதையம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தீமிதி திருவிழா

அதிராம்பட்டினத்தில் திரவுபதையம்மன் கோவில் உள்ளது.பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் தீமிதி திருவிழா நடைபெறும்.அதன்படி இந்த ஆண்டு விழாகடந்த 20-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

விழா நாட்களில் அம்மன் வீதி உலாவும், இரவில் கோவில் வளாகத்தில் மகாபாரதம் திரையிடப்பட்டு வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று மாலை நடந்தது.

தீக்குண்டத்தில் இறங்கிய பக்தர்கள்

முன்னதாக மன்னப்பன் குள கரையில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து கோவில் மண்டபம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதில் ஒரு சிலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்தபடி தீக்குண்டத்தில் இறங்கினர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கரையூர் தெரு நிர்வாகிகள் செய்திருந்தனர். அதிராம்பட்டினம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்