இரட்டை காளியம்மன் கோவிலில் தீமிதி விழா

திருவண்ணாமலை இரட்டை காளியம்மன் கோவிலில் தீமிதி விழா

Update: 2022-07-22 17:11 GMT

திருவண்ணாமலை சின்னக்கடைத் தெரு வடக்கு தெருவில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இரட்டை காளியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெற்றது.

முன்னதாக காலையில் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மதியம் 1 மணியளவில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாலை 7 மணியளவில் மேளதாளங்கள் முழங்க தீமிதி விழா நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனாக தீ மிதித்தனர்.

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்