அகரம்சித்தாமூர்பாஞ்சாலி அம்மன் கோவிலில் தீமிதி விழாஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்

அகரம்சித்தாமூர் பாஞ்சாலி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினா்.

Update: 2023-05-11 18:45 GMT


விழுப்புரம் அருகே அகரம்சித்தாமூர் கிராமத்தில் பிரசித்தி பெற்றதும், பழமைவாய்ந்ததுமான பாஞ்சாலி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அக்னி வசந்த உற்சவ பெருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.

அதுபோல் இந்த ஆண்டும் 170-வது ஆண்டாக அக்னி வசந்த உற்சவ பெருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் தீமிதி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலின் முன்பு தீக்குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் தர்மர் பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதில் அகரம்சித்தாமூர் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் அகரம்சித்தாமூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்