முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

Update: 2023-05-24 20:12 GMT

கபிஸ்தலம் முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முத்துமாரியம்மன் கோவில்

கபிஸ்தலம் பூண்டி தெற்கு செங்குந்தர் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 5-ந்தேதி பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியும், சுவாமி வீதி உலாவும் நடந்தது. விழாவில் நேற்றுமுன்தினம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை சத்திரம் காவிரி படித்துறையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தீமிதிக்கும் இடத்தை வந்தடைந்தது. பின்னர் அங்கு திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காப்பு அவிழ்த்தல் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற்றது. நாளை(வெள்ளிக்கிழமை) விடையாற்றி மற்றும் அம்பாள் ஊஞ்சலாட்டு விழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு செங்குந்தர் தெரு கிராம தலைவர் மற்றும் நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.

திரவுபதி அம்மன் கோவில்

கபிஸ்தலம் அருகே மேல கபிஸ்தலம் இலுப்பை தோப்பு தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த 22-ந்தேதி காலை அம்மன் கூந்தல் முடிதல் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு வாணவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மேல கபிஸ்தலம் இலுப்பு தோப்புத்தெரு கிராம மக்கள் மற்றும் நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்