முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

ரிஷிவந்தியம் அருகே முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-08-25 18:45 GMT

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் தேர்திருவிழா கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை, இரவில் வினாயகர், முருகன், செல்லியம்மன் வீதி உலா நடைபெற்றது.

பின்னர் 20-ந் தேதி சாகை வார்த்தல், 21-ந் தேதி ஊரணி பொங்கல் வைத்தல், 22-ந் தேதி பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மதியம் 2 மணியளவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள அக்னி குண்டத்தில் ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் இறங்கி தீ மிதித்து நோ்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்