திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் 3-ம் சேத்தியில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. முன்னதாக அர்ஜூனன் தவசு, அரவான் கடப்போர், படுகளம் உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து தீக்குண்டம் எதிரே நிறுத்தப்பட்டது. பின்னர் விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.