காங்கியனூர்திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழாபக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்

காங்கியனூர் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2023-07-09 18:45 GMT

திரவுபதியம்மன் கோவில்

விழுப்புரம் காங்கியனூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டு தீமிதி விழா கடந்த மாதம் 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. இதையொட்டி தினமும் சாமிக்கு சிறப்பு பூஜைகளும், இரவு அம்மன் வீதிஉலா போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தேரோட்டம் மற்றும் தீமிதி விழா நடைபெற்றது. இதையொட்டி காலையில் திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தேர் திருவிழா நடைபெற்றது.

பக்தர்கள் சாமி தரிசனம்

அதன்பிறகு மாலை 3 மணியளவில் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த விழாவில் காங்கியனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் மற்றும் காங்கியனூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்