சின்னவடவாடிதிரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடந்து வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று மாலை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.