தீப்பாய்ந்தாள் முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

சிதம்பரம் அருகே தீப்பாய்ந்தாள் முத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2022-08-17 19:35 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தில் ஸ்ரீ தீப்பாய்ந்தாள் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீமித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்