பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்

வெள்ளக்குடியில் பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-09-29 18:45 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வெள்ளக்குடியில் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது.இந்த அலுவலகத்திற்கு நாள்தோறும் அப்பகுதி மக்கள் வந்து தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் அரசின் திட்டங்கள், அரசால் வழங்கப்படும் சலுகைகள் போன்றவற்றுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

பழுதடைந்தது

தற்போது இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து செங்கற்கள் வெளியில் தெரிகின்றன. கட்டிடத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மூங்கில் தட்டிகளால் மூடப்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் கட்டிடம் ஈரமாக உள்ளது. மேலும், கட்டிடத்தின் மேற்கூரை பழுதடைந்து உள்ளதால் மழைநீர் கசிந்து ஆவணங்கள் நனைந்து வருகின்றன.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

இதனால், இந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். எனவே, பழுதடைந்த இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்