சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேருக்கு டி.ஐ.ஜி. பாராட்டு

செல்போன் பறித்த வாலிபர்களை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேரை டி.ஐ.ஜி. பாராட்டினார்.

Update: 2023-02-07 16:46 GMT

கே.வி.குப்பத்தை அடுத்த தாமோதரன்பேட்டையை சேர்ந்தவர் வக்கீல் விஜயகுமார். இவரின் செல்போனை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் பறித்து சென்றனர். இதுகுறித்து விஜயகுமார் கே.வி.குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதற்கிடையே செல்போனை பறித்து சென்ற யுவனேஷ், வேணு ஆகியோரை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர்.

வக்கீலிடம் இருந்து செல்போன் பறித்து சென்ற 5 மணிநேரத்தில் 2 பேரையும் கைது செய்த கே.வி.குப்பம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தவமணி, போலீஸ்காரர்கள் திவாகர், சதீஷ்குமார், காளிதாஸ் மற்றும்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தையின் அழுகையை நிறுத்தி சமாதானம் செய்த சத்துவாச்சாரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரி ஆகியோரின் செயல்களை பாராட்டும் விதமாக வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி 5 பேரையும் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்துக்கு அழைத்து பாராட்டி சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

அதேபோன்று வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்