அனுமதியின்றி டீசல் விற்றவர் கைது
அனுமதியின்றி டீசல் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ்குமார் மற்றும் போலீசார் உப்பத்தூர் விலக்கு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் உரிய அனுமதியின்றி டீசல் விற்பனை செய்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கடையில் இருந்த குற்றாலிங்கம் மகன் ராமர் (வயது39) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 37 லிட்டர் டீசலை பறிமுதல் செய்தனர்.