குளங்களில் டீசல் படகுகளை இயக்க கூடாது

குளங்களில் டீசல் படகுகளை இயக்க கூடாது என்று கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டத்தில் வலையுடன் வந்து மீனவர்கள் மனு அளித்தனர்.

Update: 2022-08-30 15:29 GMT

குளங்களில் டீசல் படகுகளை இயக்க கூடாது என்று கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டத்தில் வலையுடன் வந்து மீனவர்கள் மனு அளித்தனர்.

குறைதீர்ப்பு கூட்டம்

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மேயர் கல்பனா தலைமை தாங்கினார். துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். குறைதீர்ப்பு கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக பலரும் மனு அளித்தனர்.

கோவை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் எம்.பாலமுருகன், துணைத்தலைவர் ஆர்.ரமேஷ், நிர்வாகிகள் முருகானந்தம், சீனிவாசன், நாகராஜ் ஆகியோர் தலைமையில் வந்த மீனவர்கள் மீன்பிடிப்பது போல் வலைகளை வீசி கோரிக்கை களை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

அவர்கள் அளித்த மனுவில், 11 குளங்களில் மீன் பிடிக்க கலெக்டர் அனுமதி அளித்துள்ளார். தற்போது உக்கடம் வாலாங்குளம், பெரிய குளத்தில் டீசல் படகுகள் விடுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பெடல் படகுகளை மட்டும் இயக்கி மீனவர் குடும் பங்களை காப்பாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

புதர் மண்டிய பள்ளிக்கூடம்

ம.தி.மு.க. கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி அளித்த மனுவில், 26-வது வார்டு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகம் புதர் மண்டி, பாம்புகள் நடமாட்டம் உள்ளது. ஸ்ரீராம் நகரில் சாலை வசதி செய்து தர வேண்டும். பயனீர் மில் உள்ளிட்ட பகுதிக ளில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். மழை வெள்ள காலத்தில் பாதிப்பு ஏற்படுவதால் அனைத்து சாக்கடை வடிகாலையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆவணங்கள் மாயம்

சவுரிபாளையத்தை சேர்ந்த தியாகராஜன் அளித்த மனுவில்,

கிருஷ்ணாகாலனி லே-அவுட் 3-வது கிராசில் மாநகராட்சி பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்துக்கு கட்டிட அனுமதி வேண்டி போலி வரைபடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மீது விசாரணை நடத்தினர். ஆனால் அந்த போலி வரைபட கோப்பு மாயமாகி உள்ளது. இதற்கு காரணமான முன்னாள் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கம்

கிருஷ்ணா நகர் குடியிருப்பு சங்க தலைவர் செல்வராஜ் அளித்த மனுவில், பிருந்தாலே -அவுட் அருகே வீடுகளுக்கு சாக்கடை நீர் புகும் நிலை உள்ளதால் தாளவாய்க்காலை தூர்வாரவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

பீளமேடு நுகர்வோர் அமைப்பு தலைவர் கோபாலன் அளித்த மனுவில், 22 மற்றும் 24-வது வார்டு தண்ணீர் பந்தல் எஸ் பெண்டு பகுதியில் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். தண்ணீர் பந்தல் சாலையில் ரெயில்வே மேம்பால பணி முடியாமல் உள்ளது. அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்