பொக்லைன் ஆபரேட்டர் மின்சாரம் தாக்கி பலி

பள்ளிபாளையம் அருகே மழைநீரை அகற்றியபோது பொக்லைன் ஆபரேட்டர் மின்சாரம் தாக்கி இறந்தார்.

Update: 2023-05-16 18:45 GMT

பள்ளிபாளையம்

வெப்படை அருகே சவுதாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது34). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் அந்த பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இதற்கு விஜயன் நேற்று ஜெனரேட்டர் வைத்து, குழாய் மூலமாக அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஜெனரேட்டரில் இருந்து திடீரென விஜயன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வெப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்