பாலக்கோடு அருகேகிணறு தூர்வாரும்போது தலையில் கல் விழுந்து தொழிலாளி சாவு

Update: 2023-05-11 19:00 GMT

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கன்னிப்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 63). கிணறு வெட்டும் தொழிலாளி. இவர் நேற்று காலை பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தை சேர்ந்த முத்துராஜ் என்பவருடைய விவசாய கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார். அப்போது கிணற்றின் மேல் பகுதியில் இருந்த கல் ஒன்று வடிவேல் தலையின் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கு நின்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வடிவேல் நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்