அஞ்செட்டி அருகேமின்னல் தாக்கி தொழிலாளி பலி

Update: 2023-04-24 19:00 GMT

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே மின்னல் தாக்கி தொழிலாளி பலியானார்.

கூலித்தொழிலாளி

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி தாலுகா தொட்டமஞ்சி அருகே உள்ள திம்மத்து கொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் கெம்பப்பா (வயது 40). கூலித்தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு விறகு சேகரிக்க சென்றார். அப்போது அங்கு இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.

விசாரணை

இதனால் கெம்பப்பா மழைக்கு ஒதுங்க முயன்றபோது அவரை மின்னல் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த கெம்பப்பா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அஞ்செட்டி போலீசார் கெம்பப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி உயிரிழந்த கெம்பப்பா குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்