பாலக்கோடு அருகேரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலி

Update: 2023-01-05 18:45 GMT

பாலக்கோடு அருகே ரெயிலில் அடிபட்டு தொழிலாளி பலியானார்.

தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 45) தொழிலாளி.

இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த தர்மபுரி ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முனியப்பனின் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்