லாரி மீது கார் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு

Update: 2022-12-08 18:45 GMT

பர்கூர்:

ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து நேற்று முன்தினம் காரில் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு சென்றனர். அப்போது கந்திகுப்பத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மேம்பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மற்றொருவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மட்டவேணு பாபு (வயது 32) என்பவர் உயிர் இழந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்