மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி
மரத்தில் மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 41). தொழிலாளி இவரும், காவேரிப்பட்டணம் ராயல் நகரை சேர்ந்த சுரேஷ் (50) என்பவரும் கடந்த 4-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு- காவேரிப்பட்டணம் சாலையில் வரட்டனப்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை மாதேஷ் ஓட்டினார். அப்போது மோட்டார்சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மாதேசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.