1½ மாத பெண் குழந்தை திடீர் சாவு

1½ மாத பெண் குழந்தை திடீர் சாவு

Update: 2022-09-06 17:04 GMT

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 35). இவருக்கு 1½ மாதத்தில் ஜான்வியா என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருந்தது. அதனால் சம்பவத்தன்று உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சையளித்தனர். ஆனால் நேற்று முன்தினம் அதிகாலை குழந்தை ஜான்வியா சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தது. இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்