ஊத்தங்கரை அருகே ெரயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

ஊத்தங்கரை அருகே ெரயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை

Update: 2022-06-05 16:48 GMT

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கீழ் எட்டிப்பட்டி பகுதியில் உள்ள ெரயில் தண்டவாளத்தில் 30 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதாக ெரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ெரயில்வே போலீசார் அங்கு சென்று வாலிபர் உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என அடையாளம் தெரியவில்லை. வாலிபர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து ெரயில் தண்டவாளத்தில் வீசி சென்றார்களா? என பல்வேறு கோணத்தில் ெரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்