தேர்தலுக்காக பிரதமர் தமிழகம் வந்தாரா.? அண்ணாமலை விளக்கம்

தமிழகம் மட்டுமன்றி மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பிரதமர் சென்று வந்துள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

Update: 2024-03-17 08:23 GMT

திருப்பூர்,

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;

"கடந்த ஆண்டு 4 முறை பிரதமர் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அப்போது தேர்தலுக்காகவா பிரதமர் தமிழகம் வந்தார். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தருவது தேர்தலை மனதில் வைத்து அல்ல. பிரதமர் வருவது நல்லது தானே..

பிரதமர் மோடியின் வருகையை தேர்தல் தேதியோடு ஒப்பிட்டு பேசி எதிர்கட்சிகள் தங்களின் தோல்விக்கான காரணத்தை தெரிவித்துள்ளனர். தமிழகம் மட்டுமன்றி மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பிரதமர் சென்று வந்துள்ளார். பிரதமர் பயணத்தை விமர்சிக்கும் திமுகவினர், முதல் அமைச்சர் வெளியே வராதது குறித்து பேசுவார்களா.

'பிஎம் ஸ்ரீ' பள்ளி திட்டத்தில் கையெழுத்து போடும் தி.மு.க. அரசு, புதிய கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறுவது ஏற்கத்தக்கதல்ல." இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்