சென்னையில் மழைநீர் பாதிப்பை எடப்பாடி பழனிசாமி பார்த்தாரா? - அமைச்சர் சேகர்பாபு கேள்வி

எடப்பாடி பழனிசாமி குறை கூறினாலும், எங்களின் பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Update: 2022-11-03 04:21 GMT

சென்னை,

சென்னையில் பெய்த மழையில் அதிக பாதிப்புக்குள்ளான திருவிக நகர் மண்டலத்தில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்திய பின் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மழைநீர் தேங்கிய இடங்களில் 95% வெளியேற்றப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாக மழைநீர் தேங்கிய அனைத்து இடங்களிலும், இந்தாண்டு ஒரு சொட்டு கூட மழைநீர் தேங்கவில்லை.

எடப்பாடி பழனிசாமி குறை கூறினாலும், எங்களின் பணி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மத்திய அரசுக்கு பயந்து பயந்து ஆட்சியை நடத்தியது அதிமுக. சென்னையில் மழைநீர் பாதிப்பை எங்கேயாவது சென்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்த்தாரா? எதிர்க்கட்சித்தலைவராக இருந்த போது ஸ்டாலின் மழைநீர் பாதிப்பை பார்த்ததாக பழனிசாமிக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்தார்.

மேயராகவும் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோதும் எதுவும் செய்யாதவர் முதல்-அமைச்சர் ஸ்டாலின் என ஈபிஎஸ் குற்றம்சாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்