பொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசின் சர்வாதிகாரமே காரணம்சின்னசேலத்தில் கே.எஸ்.அழகிரி பேட்டி

பொருளாதார வீழ்ச்சிக்கு மோடி அரசின் சர்வாதிகாரமே காரணம் என்று சின்னசேலத்தில் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

Update: 2023-01-04 18:45 GMT

சின்னசேலம், 

கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு கட்சி கொடியேற்றினார்.

தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், காந்தி நடத்திய தண்டி யாத்திரை போல் ராகுல் காந்தி தொடங்கியுள்ள இந்தியாவின் ஒற்றுமை பயணம் அகில இந்திய அளவில் மக்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது. மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோல் ஒரு லிட்டர் 70 ரூபாய்க்கும், சமையல் எரிவாயு சிலிண்டர் 400 ரூபாய்க்கும் வழங்கப்பட்டது. இப்போது 7 ஆண்டு கால மக்கள் விரோத மோடி அரசு பெட்ரோல் லிட்டர் 100 ரூபாய்க்கும், கியாஸ் சிலிண்டர் 1,200 ரூபாய்க்கும் விற்பனை செய்கிறது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி பண மதிப்பிழப்பு சட்டத்தை கொண்டு வந்த மோடி அரசு எந்த கருப்பு பணத்தையும், வெளியே கொண்டு வரவில்லை. பொருளாதாரம் குறித்து கலந்து ஆலோசனை செய்யாமல் எடுக்கப்பட்ட சர்வாதிகார நடவடிக்கையால் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றார்.

பேட்டியின் போது விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்கணேஷ், பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ஜெய்கணேஷ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்