'மக்கள் மனங்களை வென்றுவிட்டார் தோனி' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்வது இது 5-வது முறையாகும்.

Update: 2023-05-30 05:22 GMT

சென்னை,

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திரில் வெற்றி பெற்று 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஐ.பி.எல். கோப்பையை சென்னை அணி வெல்வது இது 5-வது முறையாகும். இதன் மூலம் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்சின் சாதனையை சமன் செய்தது. ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை அணிக்கு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

"எப்போதும் போல எல்லோரையும் கடைசி நிமடங்களில் பிபி (BP)மாத்திரை போட வைத்த போட்டி.. வியூகங்கள் எதிரணியை மட்டுமல்ல ரசிகர்களையும் வியப்படைய செய்கிறது. ஐந்தாவது முறையாக கோப்பையையும் மக்கள் மனங்களையும் வென்றெடுத்து விட்டார் தோனி! தோனி ஒரு சகாப்தம்! வாழ்த்துக்கள் !" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்