ஈரோட்டில் ரெயில் ஓட்டுனர்கள் குடும்பத்துடன் தர்ணா
ஈரோட்டில் ரெயில் ஓட்டுனர்கள் குடும்பத்துடன் தர்ணா
அனைத்திந்திய ரெயில் ஓட்டுனர்கள் சங்கம் சார்பில், ஈரோடு ரெயில் நிலையம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு சேலம் கோட்ட தலைவர் எஸ்.அருண்குமார் தலைமை தாங்கினார். கணேசமூர்த்தி எம்.பி. கலந்து கொண்டு போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்களுக்கு விருப்ப பணி இடமாறுதல் வழங்க வேண்டும். மகளிர் ஓட்டுனர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் ரெயில் ஓட்டுனர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.