தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்
செய்யாறில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்
செய்யாறு
செய்யாறு தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் க.பிரபு, மாவட்ட துணைத்தலைவர் பாஸ்கர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
இதில். மாநில பொதுச்செயலாளர் ச.பாரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், கொரோனா தொற்றுக் காலத்தில் பறிக்கப்பட்ட சலுகைகளை உடனே வழங்க வேண்டும்,
சத்துணவு, அங்கன்வாடி உள்பட தொகுப்பூதியம் பெறும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
அனைத்து ஒப்பந்தம் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் நிரந்தரப்படுத்த வேண்டும். மத்திய, மாநில அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொதுவினியோக முறையை சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடந்தது.