காங்கிரஸ் பிரமுகர் தர்ணா போராட்டம்
கயத்தாறில் காங்கிரஸ் பிரமுகர் தர்ணா போராட்டம் நடத்தினார்.
கயத்தாறு:
கயத்தாறில் தாலுகா அலுவலகம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை தலைவர் வழக்கறிஞர் அய்யலுசாமி தனது கழுத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலி காசோலைகளை மாலையாக தொங்கவிட்டு வந்தார். கந்து வட்டி சட்டத்தை திருத்தி அமைக்கக்கோரி கோஷங்களை எழுப்பி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். பின்னர் தாசில்தார் சுப்புலட்சுமியிடம் மனு கொடுத்தார்.