எல்.ஐ.சி. ஊழியர்கள் தர்ணா போராட்டம்

மோகனூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-30 19:11 GMT

மோகனூர்

மோகனூரில் உள்ள எல்.ஐ.சி. சாட்டிலைட் அலுவலகம் முன்பு அகில இந்திய அளவிலான முகவர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு இணைந்து நடத்திய தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மூத்த முகவர்கள் தங்கவேல், சுப்பிரமணியன், ஞானவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பாலிசிதாரர்கள் போனசை உயர்த்த வேண்டும், ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும், கிராஜுவிட்டியை உயர்த்த வேண்டும், குழு காப்பீட்டை உயர்த்த வேண்டும், அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், நேரடி முகவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும், முகவர் நலநிதி அமைக்க வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும், முகவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி கடன் வழங்க வேண்டும், பாலிசி கடனுக்கு வட்டியை குறைக்க வேண்டும், முகவர்களின் வீட்டு கடன் வட்டியை குறைக்க வேண்டும், 5 ஆண்டுகளுக்கு மேலான பாலிசி புதுப்பிக்க வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த தர்ணா போராட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்