தர்ணா போராட்டம்

முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-31 19:00 GMT

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகில் ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் விஜயன், செயலாளர் காசி, மாவட்ட துணை தலைவர் நல்லுகுமார் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் தேவர், செந்தூர்பாண்டியன் ஆகியோர் பேசினர்.

இதில் தமிழக அரசு தாமதிக்காமல் விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி மற்றும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும், முல்லை பெரியாறு பாசன பரப்பை முகவை மாவட்டத்தில் 86400 ஏக்கர் ஒருபோக சாகுபடிக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பேபி அணையை பயன்படுத்தி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி வறட்சியை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், முல்லை பெரியாறு பாசன பரப்பில் பறவையாறு, கிருதுமால், குண்டாறு பாசன பரப்பை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மாவட்ட இணை செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை தலைவர் பாலா, ஒன்றிய தலைவர்கள் விஸ்வநாதன், சுரேஷ்குமார், செயலாளர் ஜெயமுருகன், துணை செயலாளர் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்