சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணா
சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
சித்தர்ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் அறக்கட்டளை சார்பில் மேலக்கரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போதுஅந்த மனுவை அலுவலகத்தில் வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.அப்போது அவர்கள் கொடுத்த மனுவில், சித்தர் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமிகள் ஜீவசமாதி கரூர் கோவை சாலை பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு இந்த இடத்தில் ஜீவசமாதி அமைக்கப்பட்டது. இன்று வரை பூஜைகள், பராமரிப்புகளை சீடர்கள் நடத்தி வருகிறார்கள். 2021-ம் ஆண்டு அறக்கட்டனை ஆரம்பிக்கப்பட்டு ஜீவசமாதியில் பூஜைகள், பராமரிப்புகள் அதன்மூலம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த இடத்தை ஒருவர் கிரயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக விவரம் அறிந்தோம். எனவே இந்த இடத்தை கிரயம் செய்ய அனுமதிக்க வேண்டாம் என்றும்,உரிய களப்பணி செய்ய வேண்டியும் கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.