விழுப்புரத்தில்ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா

விழுப்புரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-07-18 18:45 GMT


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார். பொருளாளர் ரத்தினம் வரவேற்றார். செயலாளர் அய்யாக்கண்ணு, கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மின்வாரிய நல அமைப்பின் மாவட்ட தலைவர் புருஷோத்தமன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் மேகநாதன் சிறப்புரையாற்றினார்.

முதல்-அமைச்சரின் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், 70 வயது பூர்த்தியடைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் குமாரதாஸ், கிருஷ்ணமூர்த்தி, திருநாவுக்கரசு, இணை செயலாளர்கள் லோகநாதன், மோகன், ரவீந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் வட்ட செயலாளர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்