அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா

தென்காசியில் அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா நடைபெற்றது

Update: 2022-07-26 16:31 GMT

தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை தர்ணா போராட்டம் நடைபெற்றது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள் போன்ற தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் சுமார் 3½ லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று மாநில அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலைமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் சண்முகம், இணைச்செயலாளர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சலீம் முகமது மீரான் தொடக்க உரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் கோரிக்கைகள் குறித்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரைசிங் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் வேல்ராஜன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்