காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2023-09-21 18:45 GMT


60 ஆயிரம் காலி பணியிடங்கள்

மின்வாரியத்துறையில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு நிலுவைத்தொகையில் ஒப்பந்தப்படி முதல் தவணைத்தொகையை உடனே வழங்க வேண்டும், வருங்கால வைப்பு நிதி முன்கடன், பயணப்படி, மருத்துவ செலவினங்களை திரும்ப பெறுதல், இரட்டிப்பு ஊதியம், இரவுநேர படி, பணப்பட்டியல் அனைத்தையும் கால தாமதமின்றி வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தர்ணா போராட்டம்

அந்த வகையில் விழுப்புரம் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் விழுப்புரம், கடலூர் கிளைகள் சார்பில் நடைபெற்ற தர்ணா போராட்டத்துக்கு மண்டல செயலாளர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் மூர்த்தி தொடக்க உரையாற்றினார். கடலூர் செயலாளர் தேசிங்கு, விழுப்புரம் செயலாளர் சேகர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். மாநில துணை பொதுச்செயலாளர் பழனிவேல் நிறைவுரையாற்றினார். இதில் விழுப்புரம் சிறப்பு தலைவர் சிவசங்கரன், பொருளாளர் ஏழுமலை, துணைத்தலைவர் புருஷோத்தமன், கடலூர் சிறப்பு தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் ஜீவா, இணை செயலாளர் கோவிந்தராசு, கோட்ட செயலாளர்கள் அருள், கன்னியப்பன், முருகானந்தம், ஏழுமலை, தமிழ்நாடு மின் பொறியாளர் அமைப்பு கிளை செயலாளர் அய்யப்பன், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகி நிஷாந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கடலூர் கோட்ட தலைவர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்