விழுப்புரம் போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. பாராட்டு
நீச்சல், ஓட்ட போட்டியில் வெற்றிபெற்ற விழுப்புரம் போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. பாராட்டினாா்.
விழுப்புரம்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த 3-ந் தேதியன்று தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகள் நடைபெற்றன. இதில் விழுப்புரம் ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு கனகராஜ், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகிய இருவரும் கலந்துகொண்டனர். இவர்களில் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ், நீச்சல் போட்டியில் 2 தங்கம், 2 வெள்ளிப்பதக்கங்களையும், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்கள் இருவரும் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் பதக்கங்களை காண்பித்து பாராட்டு பெற்றனர்.
சாதனை படைத்த போலீஸ் துணை சூப்பிரண்டு கனகராஜ், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகிய இருவரையும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் பாராட்டினர்.