2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு டி.ஜி.பி. பாராட்டு
சிறப்பாக விசாரணை மேற்கொண்ட 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு டி.ஜி.பி. பாராட்டு தெரிவித்தார்.
ஊட்டி,
கோவை கோட்டைமேடு பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திறமையாக சிறப்பாக விசாரணை மேற்கொண்ட கோவை, நீலகிரி மாவட்ட போலீசாருக்கு போலீஸ் டி.ஜி.பி. ைசலேந்திர பாபு பாராட்டு தெரிவித்து உள்ளார். இதில் நீலகிரி மாவட்டம் குன்னூர் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அனந்தராஜன், கொலக்கம்பை சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் ஆகியோருக்கு டி.ஜி.பி. ைசலேந்திரபாபு பாராட்டு சான்றிதழை வழங்கினார். 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் சக போலீசார் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.